7000 படையினர் ஆயத்த நிலையில்..

February 10, 2018 2:53 AM

10 0

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஏழாயிரம் படையினர் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக இவ்வாறு படையினர் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

முப்படைகளையும் சேர்ந்த ஏழாயிரம் பேர் இவ்வாறு ஆயத்த நிலையில் உள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக அடையாளம் காணப்பட்ட 167 வாக்குச் சாவடிகளுக்கு படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் பிரிவொன்று அவசர உதவியை கோரினால் உடனடியாக படையினரை அந்த இடத்திற்கு அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரிகேடியர் அத்தபத்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...