68 ஆவது இராணுவ தினத்தை கொண்டாடும் இலங்கை இராணுவம்..!! (வீடியோ & படங்கள்)

October 11, 2017 2:26 PM

9 0

நாட்டை பாதுகாக்கும் நோக்கத்துடன் இருக்கும் இலங்கை இராணுவம் 68ஆவது நினைவு தின விழாவை செவ்வாய்க் கிழமை (10) ஆம் திகதி பனாகொடை இராணுவ முகாமில் நேற்றைய தினம் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவரது பாரியார் மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திரிகா சேனாநாயக வருகை தந்து கொடிகளை ஏத்தி இந்த நிகழ்வை ஆரம்பித்து வைப்பார்.

இந் நிகழ்விற்கு வருகை தந்த இராணுவ தளபதியை பாதுகாப்பு பதவி நிலை பிரதானியான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர வரவேற்று இராணுவ தளபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இந்த அணிவகுப்பு மரியாதைக்கு கட்டளை அதிகாரியாக இராணுவ யுத்த உபகரண மாஸ்டர் ஜெனரல் பதவியை வகிக்கும் மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்புகள் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இராணுவ கொடிகள் ஏற்றப்பட்டு பின்பு இலங்கையின் சுதந்திரம், தேசிய ஒருமைப்பாடு , இறைமை ஒற்றுமை என்பவற்றிற்காக உயிர் நீத்த படை வீரர்களை நினைவு படுத்தி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்பு இராணுவ அணிவகுப்பு மரியாதையில் ஈடுபட்டிருந்த 24 படையணிகளின் படை வீரர்களை இராணுவ நிறைவேற்று பிரதானி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா அவர்களுடன் இராணுவ தளபதி சென்று பார்வையிட்டார்.

பின்பு 2017 ஆம் ஆண்டிற்கான இராணுவ அணிவகுப்பு போட்டிகள் மற்றும் பேண்ட் போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிக்காட்டி முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பெற்ற படை வீரர்களுக்கு இராணுவ தளபதிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

பின்பு இராணுவ தளபதியினால் இராணுவ தின நிகழ்வையிட்டு சிறப்புறை ஆற்றப்பட்டது. இந் நிகழ்விற்கு ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ தளபதிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் அவர்களது பாரியார்கள் மற்றும் படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

கண்டியில் அமைந்துள்ள தளதா மாளிகையிலும், அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஜய ஸ்ரீமஹா போதி விகாரையிலும், கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஜம்மா பள்ளிவாசலிலும், கொடஹேனவில் அமைந்துள்ள பொண்ணம்பலவானேசர் கோயிலிலும் , பொறளை கிறிஸ்தவ ஆலயத்திலும், கிரிவெஹர, கதிர்காமம் மற்றும் பனாகொட போதிராஜா விகாரையிலும் இடம்பெற்றது. மேலும் ரணவிரு நினைவு துாபி நிகழ்வு இடம்பெற்றது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...