4 வீதத்தால் பஸ் கட்டணம் அதிகரிப்பு?..!!

September 15, 2018 5:42 AM

11 0

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு சமாந்திரமாக பஸ் கட்டணமும் சீராக்கம் செய்யப்படும் விதமான முறை ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறினார்.

எதிர்பார்த்துள்ள பஸ் கட்டண அதிகரிப்பு சம்பந்தமாக இரண்டு வாரங்களுக்குள் அரசிடமிருந்து தீர்வை எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

இதேவேளை விலைச் சூத்திரத்திற்கு அமைவாக மாதம் ஒருமுறை எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்பட வேண்டியதில்லை என்று அனைத்து மாகாண பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார கூறினார்.

அதேவேளை பஸ் கட்டணத்தை அதிகரிப்பதென்றால் அதனை நூற்றுக்கு 4 வீதத்தால் மாத்திரம் ​மே அதிகரிப்பதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறினார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...