334 பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு காணிகள்..!!

August 12, 2018 2:11 AM

8 0

334 பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு காணிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்குக் காணிகளை வழங்க 28 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது கல்வி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாடசாலைகளுக்கு அருகாமையில் மாணவர்களை இலக்கு வைத்து மதுபாவனை, சிகரட் முதலான விரும்பத்தகாத செயல்கள் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறான தீய பழக்கங்கள் எமது மாணவர் சமுதாயத்தில் ஏற்படாத வகையில், ஆசிரியர்கள், பெற்றோரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர் பிள்ளைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தினால் அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமையும்.

அது மாத்திரமன்றி அவர்கள் நாட்டின் நற்பிரஜைகளாக வருவார்கள் என்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...