3 பெண்களை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர்- தானும் தற்கொலை..!!

March 11, 2018 5:00 PM

13 0

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நபா பள்ளத்தாக்கில் யுவான்ட் வில்லேவில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையம் உள்ளது. அங்கு ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு போரில் ஈடுபட்டு மனஅழுத்த நோயினால் பாதிக்கப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த மையத்தில் பல முன்னாள் ராணுவ வீரர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அங்கு ஒரு மர்ம நபர் வந்தார். அவர் திடீரென தனது துப்பாக்கியை எடுத்து அங்கு இருந்தவர்களை மிரட்டினார்.

அவர்களில் அங்கு பணியில் இருந்த 3 பெண்களை பிடித்துக் கொண்டார். மற்றவர்களை அங்கிருந்து வெளியேற்றினார்.

இதற்கிடையே தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 3 பெண்களையும் அந்த நபர் சுட்டுக் கொன்றான்.

அவர்களது பெயர் ஜெனிபர் கோலிக் (42), கிறிஸ்டின் லோபர் (48), ஜெனிபர் கான்சிலேஷ் (29). இதற்கிடையே அவர்களை கொன்ற மர்மநபர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்களது பிணங்களை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர்.

தற்கொலை செய்து கொண்ட கொலையாளியின் பெயர் ஆல்பர்ட் வாங் (36) என தெரியவந்தது. இவர் முன்னாள் கடற்படை வீரர். சேக்ராமண்யே பகுதியை சேர்ந்தவர்.

இவர் ஆப்கானிஸ்தானில் கடந்த 2010 முதல் 2013-ம் ஆண்டு வரை தங்கி பணி புரிந்துள்ளார். தனது சிறப்பான சேவைக்காக 4 பதக்கங்கள் பெற்றுள்ளார். மன அழுத்தத்துக்காக இங்கு சிகிச்சை பெற்றுள்ளார். இவர் எதற்காக 3 பெண்களை சுட்டுக் கொன்றார் என தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...