3 நாள் அரசு முறை பயணமாக வங்கதேசம் செல்கிறார் உள்துறை மந்திரி..!!

July 12, 2018 7:05 PM

10 0

வங்கதேசத்தின் உள்துறை மந்திரி அசாதுஸமான் கான் விடுத்த அழைப்பை ஏற்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஜூலை 13 முதல் 15 வரை 3 நாள் அரசு முறை பயணமாக வங்கதேசம் செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 வருடங்களுக்கு பிறகு இருநாட்டு உள்துறை மந்திரிகள் இடையேயான சந்திப்பு நடைபெற உள்ளது.

இந்த சந்திப்பின் போது ராஜ்நாத் சிங் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்திக்க உள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் வங்கதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்திய விசா அலுவலகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்கின்றனர்.

உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் இந்த அரசு முறை பயணத்தில் இருநாட்டு உறவுகள் மற்றும் எல்லைப்பாதுகாப்புகள் குறித்து பேசப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...