2 மில்லியன் டொலர் லஞ்சம் வாங்கிய அரசியல்வாதியின் மகன்

September 17, 2017 4:08 AM

9 0

அமைச்சர் ஒருவரின் மகன் சீன சிறுவனமொன்றிடமிருந்து இரண்டு மில்லியன் டொலர் கையூட்டல் பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சீன நிறுவனமொன்றுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை ஒன்றுக்கு பிரதி உபகாரமாக குறித்த நிறுவனம் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை, அமைச்சரின் மகனுக்கு உண்டியல் முறையில் அனுப்பி வைத்துள்ளது.

புறக்கோட்டை உண்டியல் வர்த்தகர் ஒருவரின் ஊடாக இந்த இரண்டு மில்லியன் டொலர் பணத்தை குறித்த அமைச்சரின் மகன் பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த கையூட்டல் தொகை மிகவும் இரகசியமான முறையில் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என நம்பகத் தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்ட குறித்த நபர், உண்டியல் வர்த்தகருக்கு தரகுப் பணத்தையும் செலுத்தியுள்ளார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...