2 பேருக்கும் 5 மாத்திரைகள் கொடுத்திருக்கேன்… ஓடிப்போயிறலாமா? வைரலாகும் அபிராமி – சுந்தரத்தின் உரையாடல்

September 16, 2018 2:11 PM

13 0

2 பேருக்கும் 5 மாத்திரைகள் கொடுத்திருக்கேன்… ஓடிப்போயிறலாமா? வைரலாகும் அபிராமி – சுந்தரத்தின் உரையாடல்

பாலில் தூக்க மாத்திரைகளை கொடுத்து இரண்டு குழந்தைகளை கொலை செய்த பின்பு அபிராமி தனது கள்ளக்காதலனுடன் செல்போனில் பேசிய உரையாடல் வாட்ஸ் அப், பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது.

அபிராமி தனது கள்ளக்காதலனுடன் வாழ ஆசைப்பட்டு, தன் இரண்டு குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

குழந்தைகளை கொலை செய்த பின் அன்று இரவு (30ம்தேதி) இரவு அபிராமி தனது கள்ளக்காதலன் சுந்தரத்துடன் பேசிய செல்போன் உரையாடல் தற்போது வாட்ஸ்அப்களில் வைரலாக பரவி வருகிறது.

அபிராமி: குழந்தைங்க இரண்டு பேருக்கும் பால்ல 5 தூக்க மாத்திரை கலந்து குடுத்திருக்கேன். அவங்க நல்லா தூங்கற மாதிரி தான் இருக்கு. பெட்சீட் போத்தி வைச்சிருக்கேன்..

அபிராமி: 5 மாத்திர போட்டிருக்கேன்.. ஆனா தூங்கற மாதிரி தான் இருக்காங்க..

சுந்தரம்: என்ன பயமே இல்லாம பேசுற.. எனக்கே பயமா இருக்கு.. சரி இப்ப என்ன பண்ணலாம்.

அபிராமி: என்ன பண்றதுன்னு எனக்கும் தெரியல.. இரண்டு பேரும் எங்காவது ஓடி போயிரலாமா..

சுந்தரம்: ஓடி போறதுக்கு தானே இந்த பிளான் பண்ணேன். ஹவுஸ் ஓனர் இருக்காங்களான்னு பாரு.

சுந்தரம்: எனக்கும் ஓட்டல்ல வேலை முடியப் போகுது. முடிஞ்ச உடனே வர்றேன். உன் வீட்டுக்காரர் வருவாரா இப்போ.

சுந்தரம்: வரலன்னா எனக்கு போன் பண்ணு. நான் சொல்ற இடம் வந்திரு. நாம காலைல ஓடி போயிரலாம்.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...