14ம் திகதி நிச்சயமாக வாக்கெடுப்பு நடத்தப்படும்..!!

November 8, 2018 1:42 PM

10 0

1 9வது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு அமைய நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று காலை அலரி மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

நேற்று சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றதாகவும், அது சம்பந்தமாக அறிக்கை ஒன்றை வௌியிட்ட சபாநாயகர் எதிர்வரும் 14ம் திகதி நிச்சயமாக பெரும்பான்மைய நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறியுள்ளதாகவும் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான சூழ்ச்சிகள் இடம்பெறுதாகவும், பாராளுமன்றத்தை கலைப்பதற்கான முறை அரசியலமைப்பில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...