14ம் திகதிக்கு முன்னர் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்..!!

November 7, 2018 12:44 PM

12 0

எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவைக்கான அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளும் பணி நிறைவடையும் என்று அமைச்சரும் அமைச்சரவை ஊடகப்பேச்சாளருமான மகிந்த சமரசிங்க இன்று தெரிவித்தார்.

தற்பொழுது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அரச கட்சியை கொண்டிருப்பதாகவும் அதன் எண்ணிக்கை 117 ஆகும் என்றும் அமைச்சரும் ஊடகப்பேச்சளருமான மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர்கள் அமைச்சரவை நியமனங்கள் தொடர்பாக கேள்வியெழுப்பியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டதுடன், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமக்கே பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்திருப்பது குறித்தும் அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

இந்த நிகழ்வில் மற்றுமொரு ஊடகப்பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரசாங்க தகவல் திணைக்களப்பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...