ஹார்வே, இர்மா புயல்களை தொடர்ந்து அமெரிக்காவை தாக்கிய நேட் புயல்: கனமழை எச்சரிக்கை..!!

October 8, 2017 1:00 PM

5 0

மத்திய அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள நேட் புயல் ஹோண்டுராஸ் மற்றும் மெக்ஸிகோ நாடுகளின் சில பகுதிகளை நேற்று முன்தினம் தாக்கியது. 35 பேரை பலிவாங்கிய இந்த புயல் அமெரிக்காவின் மத்திய மாநிலங்களில் தற்போது நிலை கொண்டுள்ளது.

மிஸிசிப்பி அருகே நேட் புயல் மையம் கொண்டுள்ளதால் கனமழை பெய்து நேற்று நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மற்றொரு பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டது.

லூசியானா, மிஸிசிப்பி, அலாபாமா, ப்ளோரிடா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கடலோர நகரங்களில் கடல் அலைகள் உயரமாக வீசக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு அப்பகுதி மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது. மேலும், மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேட் புயலானது அமெரிக்காவின் தெற்கு பகுதி நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. புளோரிடா, டெக்ஸாஸ் மாநிலத்தை புரட்டிபோட்ட மரியா மற்றும் இர்மா புயல் அளவுக்கு வலுவானது இல்லை என்றாலும், நேட் புயல் வேகமாக நகர்ந்து வருவதால் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் சூழும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...