ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு பேர் கைது..!!

September 12, 2018 10:23 AM

7 0

கொழும்பில் இரண்டு வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெமட்டகொட, ஆரம்யா வீதி பிரதேசத்தில் 11 கிராமும் 300 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் 46 வயதுடைய ஒருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட நபர் தெமட்டகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதுதவிர மோதரை, தொட்டலங்க பிரதேசத்தில் 02 கிராமும் 450 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் 36 வயதுடைய ஒருவர் மோதரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு சந்தேகநபர்களும் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...