ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாநாட்டில் கல்வீச்சு தாக்குதல்: 21 பேருக்கு விளக்கமறியல்

February 5, 2018 6:00 PM

7 0

சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சி மாநாட்டின் போது குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் 21 பேர் கைது செய்யப்பட்டு, 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களை நேற்று கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரப்பன முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது எழுச்சி மாநாடு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அதன் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் பங்கேற்புடன், நேற்று முன்தினம் மாலை சாய்ந்தமருது பௌசி மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

இதனை முன்னிட்டு சாய்ந்தமருதில் அன்றைய தினம் ஹர்த்தால், கடையடைப்பு இடம்பெற்றதுடன், கறுப்புக்கொடி, பாதணிகள் என்பவற்றை கொண்டு எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த எழுச்சி மாநாட்டின் போது கூச்சல், கூக்குரல் எழுந்ததுடன், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் உரையுடன் மாநாடு நிறைவடைந்த நிலையில் அங்கு கல்வீச்சு தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன்போது பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் உட்பட சிலர் காயமடைந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து கண்ணீர்ப்புகைத் தாக்குதல்களை மேற்கொண்ட பொலிஸார் அந்த இடத்தில் 21 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...