ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது இந்தியாவுடன் சந்திப்பு இல்லை: பாகிஸ்தான்..!!

December 1, 2017 4:00 AM

7 0

ரஷியா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த அமைப்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த ஜூன் மாதம் உறுப்பினர்களாக இணைந்தன.

இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்தபின் முதல் முறையாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு ரஷ்யாவின் சோச்சி நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பங்கேற்றுள்ளார். பாகிஸ்தான் சார்பில் பிரதமர் சாகித் ககன் அப்பாஸி பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், இந்த மாநாட்டின் இடையே இந்திய உள்துறை மந்திரியை பாகிஸ்தான் பிரதமர் சந்தித்து பேச திட்டமிடப்படவில்லை என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பைசல் கூறியுள்ளார்.

மரண தண்டனை பெற்றுள்ள குல்பூஷன் ஜாதவை அவரது தாயார் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை குறித்து பாகிஸ்தான் பரிசீலித்து வருவதாகவும் பைசல் கூறினார்.

ஆயுதப்போட்டியை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்துவதாக கூறிய அவர், இந்தியா சமீபத்தில் நடத்திய ஏவுகணை சோதனை குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...