வெளிநாட்டில் 151 இலங்கையர்கள் அதிரடியாக கைது

February 9, 2018 4:23 AM

11 0

வேலை வாய்ப்புக்காக குவைத் சென்ற 151 இலங்கையர்களுக்கு அதிகமானோர் அந்த நாட்டு சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிப்பதாக நீதிமன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் சிலர் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களும், மேலும் சிலர் வழக்கு விசாரித்து தண்டனை வழங்கும் வரை சிறைச்சாலை முகாம்களில் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறையில் அடைக்கப்பட்ட இலங்கையர்களில் அதிகமானோர் ஷரியா சட்டத்தை மீறிய குற்றச்சாட்டினால் சிறை சென்றவர்களாகும்.

இவர்களுக்காக சட்ட உதவி வழங்க கூடிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதற்காக செயற்படுவதற்கு தூதரக அலுவலக அதிகாரிகள் உள்ளதாக இலங்கை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் குவைத்தில் காணப்படும் ஷரியா சட்டம் தொடர்பில் தொடர்ந்து அவதானத்தை செலுத்துமாறும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்திருக்குமாறும் அந்நாட்டில் சேவை செய்யும் இலங்கையர்களிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் குவைத் நாட்டுக்கு செல்வதற்கு எதிர்பார்த்தால் அந்த சட்டம் தொடர்பில் நன்கு அறிந்து கொள்ளுமாறும் இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...