வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் கொண்டாடிய புத்தாண்டு!

April 15, 2018 1:32 AM

17 0

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் கொண்டாடிய புத்தாண்டு!

புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்கள் நேற்று தமிழ் சிங்கள புத்தாண்டினை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

சில நாடுகளில் புத்தாண்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் புத்தாண்டு கொண்டாடப்பட்டதுடன், பாரம்பரிய சடங்குகள் செய்யப்பட்டுள்ளதாக அங்கு வாழும் இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தென்கொரியாவில் வாழும் இலங்கையர்கள் புத்தாண்டு நிகழ்வுகளை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

இதேவேளை இலங்கையர்கள் அதிகமாக தொழில்களில் ஈடுபடும் மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா மற்றும் ஜப்பானிலும் புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாடுகளில் புத்தாண்டு கொண்டாடப்பட்ட புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...