வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு

July 14, 2018 2:05 AM

13 0

கடவுச்சீட்டு விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலில் எவ்வித உண்மையும் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை உள்நாட்டு, வெளிநாட்டு குடிவரவு கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அரச ஊடகமொன்றிட்கு குறித்த நிலையத்தின் கட்டுப்பாட்டாளர் சமிந்த ஹெட்டியாராச்சி மேலும் தெரிவிக்கையில்,

கடவுச்சீட்டு விநியோகத்தில் தடையுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எனினும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் சாதாரண நடைமுறையில் விநியோகிக்கப்படுகின்றன. அத்துடன் கடவுச்சீட்டுக்கள் விநியோகத்தின் ஒருநாள் மற்றும் ஏனைய சேவைகள் வழமை போன்றே இடம்பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...