வெலிமடையில் 18 வயதுடைய இளைஞன் கைது

February 9, 2018 9:53 AM

11 0

வெலிமடையில் 18 வயதுடைய இளைஞன் கைது

சுமார் 264 கிலோ கிராம் கழிவுத் தேயிலை தூளுடன் 18 வயதுடைய இளைஞன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் வெலிமடை புகுல்பொல பகுதியில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கழிவுத் தேயிலை தூளை அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனம் ஒன்றில் அட்டம்பிட்டிய பகுதியிலிருந்து வெலிமடை பகுதிக்கு கொண்டு செல்லும் போது கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரை வெலிமடை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...