வெறும் 14.2 ஓவர்களில் சுருண்டது டெல்லி… கொல்கத்தா 71 ரன்களில் வென்றது..!! (வீடியோ)

April 16, 2018 7:47 PM

10 0

ஐபிஎல் சீசன் 11ல் இன்று நடந்த 13வது ஆட்டத்தில், டெல்லி கேப்டன் கம்பீர் டாஸ் வென்றார். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. டெல்லி 14.2 ஓவர்களில் 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ரிஷப் பந்த் 43, கிளென் மேக்ஸ்வெல் 47 ரன்கள் எடுத்தனர். சுனில் நரேன், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

ஐபிஎல் சீசன் 11ல் மொத்தம் 60 ஆட்டங்கள் நடக்க உள்ளன. சீசன் துவங்கி ஒரு வாரமாகியுள்ள நிலையில், இதுவரை 12 ஆட்டங்கள் முடிந்துள்ளன. அனைத்து அணிகளுமே தலா 3 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. அதில் சன் ரைசரஸ் ஐதராபாத் அணி மூன்றிலும் வென்று, 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

நேற்று நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை வென்றதன் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் நடக்கும் சீசனின் 13வது ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 7வது இடத்தில் உள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோத உள்ளன. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன.

201 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி முதல் ஓவரிலேயே ஜாசன் ராயை இழந்தது. ஸ்ரேயாஸ் ஐயர், கவுதம் கம்பீர் ஆட்டமிழக்க, ரிஷப் பந்த், 43 ரன்களும், கிளென் மேக்ஸ்வெல் 47 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் அதன்பிறகு மளமளவென்று விக்கெட்கள் விழ, 14.2 ஓவர்களில் 129 ரன்களுக்கு சுருண்டது. சுனில் நரேன், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...