வாணியம்பாடி அருகே தரைப்பாலம் உடைந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு..!!

October 13, 2017 6:05 AM

4 0

வேலூர் வாணியம்பாடியை அடுத்த வெலதிகாமணிபெண்டாவில் தரைப்பாலம் உடைந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். தமிழகம் – ஆந்திரா இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

வேலூர் வாணியம்பாடியை அடுத்த வெலதிகாமணிபெண்டாவில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. இது தமிழகம் மற்றும் ஆந்திராவை இணைக்கும் பாலமாகும். இந்த வழியே தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்வதுண்டு.

இந்நிலையில், இன்று அதிகாலை இந்த தரைப்பாலம் திடீரென உடைந்தது. இந்த சம்பவத்தில் போது பாலத்தில் மேல் சென்றுகொண்டிருந்த ஒரு ஆட்டோவும், ஒரு இரு சக்கர வாகனமும் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தரைப்பாலம் உடைந்ததையடுத்து தமிழகம் – ஆந்திரா இடையேயான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...