வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை கடித்து கொன்ற சிறுத்தை..!!

May 16, 2018 2:05 PM

11 0

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள கலுட்டி கிராமத்தில் முகமத் உஸ்மான் என்பவர் தனது 4 வயது பேரனுடன் வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்தனர். இன்று அதிகாலை அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து திடீரென வந்த சிறுத்தை சிறுவனை தாக்கியது.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு விழித்த உஸ்மான் சத்தம் போட்டார். பின்னர் கிராமத்தினரும் சம்பவ இடத்திற்கு வந்து சத்தமிட்டனர். இதையடுத்து சிறுத்தை காட்டிற்கும் ஓடிவிட்டது. உடனடியாக சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை சோதனை செய்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...