வீடமைப்பு திட்டத்தினால் பாதிக்கப்பட்ட பொகவந்தலாவ மக்கள் ஆர்ப்பாட்டம்…!!

February 12, 2018 6:15 AM

4 0

நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் கிழ் பிரிவு தோட்டமக்கள் இன்று காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர் .

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டபகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற வீடமைப்பு திட்டத்தினால் பெக்கோ இயந்திரம் கொண்டு வெட்டபட்டு குவிக்கப்பட்ட மண் மழை காலங்களில் கரைந்து கெர்க்கஸ்வோல்ட் கிழ் பிரிவு தோட்டமக்கள் குடி நீருக்காக பயன்படுத்தும் குடிநீரில் கலக்கபடுவதாகவும் இதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கவதாகவும் ஆரபாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர் .

அத்தோடு குறித்த நீரினை கொண்டு அன்றாடம் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லையெனவும் கடந்த 50 வருடங்களாக குறித்த நீரினை பயன்படுத்தி வருவதாகவும் இந்த வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கபட்ட பின்னர் பருகும் குடிநீரில் மண் கலக்கபடுவதாகவும் தெரிவித்தனர்.

ஆர்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டதோடு குறித்த வீடமைப்பு திட்டத்தினால் பாதிக்கபட்டுள்ள தங்களுக்கு சம்பந்தபட்ட அமைச்சர்களும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர் .

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...