விசுவமடு மக்களுக்காக மைத்திரிக்கு எழுதப்பட்ட கடிதம்! அதன் உள்ளடக்கம் என்ன?

June 13, 2018 7:00 AM

9 0

முல்லைத்தீவு விஸ்வமடு சிவில் பாதுகாப்பு படைப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த கேர்ணல் ரத்தனபிரிய பந்து என்ற அதிகாரிக்கு மீண்டும் அதே பொறுப்பை வழங்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வீரவங்ச, ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பிரிவினைவாத கொடிய போரை முடிவுக்கு கொண்டு வந்து 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை இறுதிக்கட்ட போரில் போது படையினர் மீட்டனர். இதன் மூலம் படையினரும் நாட்டின் மக்களும் தமது உயர்ந்த மனிதாபிமான பண்பை உலகிற்கு வெளிப்படுத்தினர்.

எனினும் அந்த உயர்ந்த பண்பை பாராட்டவும் அதன் ஊடாக உண்மையான தேசிய நல்லிணக்கத்திற்கான பாலத்தை ஏற்படுத்த நாம் தவறி விட்டோம்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஊடாக பிரிவினைவாத சக்திகள் மனித உரிமை என்ற பெயரில் இலங்கையில் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட ஆரம்பித்ததே இதற்கான பிரதான காரணம் என்பது நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.

அப்போதில் இருந்து நல்லிணக்கம் என்ற பெயரில், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை ஒன்றாக இணைப்பதற்கு பதிலாக பிரித்தாளும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டன. அண்மையில் அந்த இருண்ட மேகங்களுக்கு மத்தியில் மிகவும் அரிதான நட்சத்திரம் ஒன்றை காண முடிந்தது.

கேர்ணல் ரத்தனபிரிய பந்து என்ற அற்புதமான மனிதன் பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு புனர்வாழ்வளித்து விஸ்வமடு மக்களின் இன்ப துன்பங்களில் காட்டி உயரிய மனிதாபிமான பண்பு அந்த பிரதச மக்களின் மனங்களில் ஆழமாக பதிந்திருப்பதை நாம் கண்டோம்.

மக்களின் கண்ணீரில் அந்த மக்களின் இதயங்களை கண்டோம். எமக்கு கண்ணீர் பெருகியது. இந்த முன்னுதாரணம் சிங்கள, தமிழ், முஸ்லிம் என முழு சமூகங்களுக்கு எதிர்காலத்திற்கான பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது.

இதனால், இந்த முன்னுதாரணத்தை மேலும் நிலைபெற செய்ய நீங்கள் தலையிடுவீர்கள் என நம்புகிறோம். இதன் ஆரம்பமாக விஸ்வமடு மக்களின் கோரிக்கைக்கு அமைய ரத்தனபிரிய பந்து என்ற அதிகாரிக்கு மீண்டும் அதே பொறுப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இதற்கு தடையேற்படுத்தும் வகையில் அதிகாரியின் தனிப்பட்ட சிரமங்கள் இருக்குமாயின் அதனை தேடியறிந்து அதற்கு தீர்வை வழங்குமாறும் கேட்டுக்கொள்வதாக விமல் வீரங்ச ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...