விக்கி முன்வைத்த யோசனையை நிராகரித்த ஆளுநர்..!!

September 16, 2018 7:33 AM

8 0

வடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, பா.டெனீஸ்வரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கி உடனேயே அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால், வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் மூலம் யோசனை தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், ஆளுநர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாண அமைச்சரவை தொடர்பில் மூன்று மாதங்களாக இழுபறி நீடித்துக் கொண்டிருக்கின்றது. மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலக் கட்டளையை வடக்கு மாகாண முதலமைச்சர் நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சுமுகமாத் தீர்ப்பதற்குரிய முயற்சிகள் ஒருபுறம் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சில தினங்களுக்கு முன்னர் வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் மூலம் யோசனை முன்வைத்துள்ளார்.

பா.டெனீஸ்வரனுக்கு அமைச்சர் பதவி வழங்கி உடனேயே அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதே அந்த யோசனையாகும். வடக்கு மாகாண ஆளுநர் அதனை நிராகரித்துள்ளார். நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை வழங்கியுள்ள விடயத்தில் அவ்வாறு செயற்பட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...