வவுனியாவில் வாக்களிப்பில் ஆர்வம் காட்டும் வாக்காளர்கள்!

February 10, 2018 6:05 AM

4 0

வவுனியாவில் வாக்களிப்பில் ஆர்வம் காட்டும் வாக்காளர்கள்!

வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான 148 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 103 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 1043 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 148 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெறுகின்றது.

குறித்த தேர்தலில் 2000 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 1500 பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...