வவுனியாவில் மாதிரி கிராமத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு..!! (படங்கள்)

July 7, 2018 11:35 AM

12 0

வவுனியாவில் மாதிரி கிராமத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு..!! (படங்கள்)

வவுனியா தரணிக்குளம் புதியநகர் பகுதியில் 17 வீடுகளை கொண்ட மாதிரிக் கிராமம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (07) கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் எஸ்.ராகுலன் தலைமையில் இடம்பெற்றது.

தரணிக்குளம் அம்மன் ஆலயத்தில் விசேடபூசை வழிபாடுகளுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் வி. சிவலிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபை தலைவர் து.நடராயசிங்கம், வீடமைப்பு அதிகாரசபையின் உதவிமுகாமையாளர் சந்திரசேகரன், மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்களான மங்களநாதன், விஸ்வநாதன், கிராமசேவகர் அஞ்சலிதாஸ், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் யோர்ச் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தரணிக்குளம் புதியநகரில் மாதிரிக்கிராமம் அமைப்பதற்கான பயனாளிகள் தெரிவு பிரதேச செயலகத்தின் மூலம் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...