வவுனியாவில் சுமார் 2 வருடங்களுக்கு முன் பிறந்த குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்

November 24, 2017 7:45 AM

5 0

சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் வவுனியா, கல்மடு, பூம்புகார் பிரதேசத்தில் பிறந்த ஆண் சிசுவை கழுத்து நெரித்து கொலை செய்யத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்ததுடன், இது தொடர்பான செய்திகள் தற்போது ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

பூம்புகார் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணொருவர் குறித்த சிசுவை பிரசவித்த நிலையில் தான் பிரசவித்த சிசுவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அது தொடர்பில் தனது தாயாருக்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இருவரும் இணைந்து தங்களது வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றுக்கருகில் சுமார் ஒன்றரை அடி ஆழத்தில் குழியொன்றை வெட்டி அதில் சிசுவின் சடலத்தை போட்டு புதைத்துள்ளனர்.

குழந்தையைப் பிரசவித்த பெண்ணுக்கு அதிகளவில் இரத்தோட்டம் ஏற்பட்டதால் அவர் வவுனியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவரில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து மருத்துவமனை அதிகாரிகள் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் அவரை விசாரித்ததில் உண்மைத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து சிசுவைப் பிரசவித்த பெண் மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை சம்பவம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில், குறித்த பெண்ணின் கணவர் கணவர் வெளிநாடொன்றில் பணிபுரிந்து வந்ததாகவும், தற்போது அவரும் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா நீதிமன்றில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போதும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் இந்த செய்தி தற்போது வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...