வவுனியாவில் ஒலிக்கவிடப்பட்ட புலிகளின் எழுச்சி கீதங்கள்!

January 13, 2018 4:16 PM

13 0

வவுனியாவில் அரசியல் கட்சி அலுவலகம் ஒன்றில் இன்றைய தினம் விடுதலைப்புலிகளின் எழுச்சிப்பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டுள்ளன.

அதிக சத்தத்துடன் வீதியால் சென்றவர்களை திரும்பிப்பார்க்க வைக்கும் அளவிற்கு குறித்த பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன.

தோணிக்கல் பகுதியில் தமிழரசுக்கட்சியின் கீழ் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் அலுவலகத்திலேயே இவ்வாறு எழுச்சிப் பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டுள்ளன.

தேர்தல் காலத்தில் இவ்வாறு புரட்சிப்பாடல்களை ஒலிக்கவிட்டு தாங்கள் விடுதலை உணர்வாளர்கள் என மக்களுக்கு தெரியப்படுத்தி வாக்குப்பெற அவர்கள் முயற்சிப்பதாகவும், அதற்கு எப்போதும் மக்கள் இணங்க மாட்டார்கள் எனவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது போன்று தற்போது பரவலாக பல பிரதேசங்களிலும் புரட்சிப்பாடல்களை ஒலிக்கவிட்டு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் ஈடுபடுவதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...