வவுனியா பண்டாரிக்குளத்தில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

July 13, 2018 3:38 PM

20 0

வவுனியா பண்டாரிக்குளத்தில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

தேசிய நுளம்பு ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் நுளம்பு ஒழிப்புதிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாளான இன்று சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.லவன் தலைமையில் இவ் வேலைத்திட்டம் முன்னெடுபக்கப்பட்டது.

வவுனியா, தேக்கவத்தை மற்றும் குட்செட் வீதி ஆகிய பகுதிகளில் டெங்கு நோயினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும், பண்டாரிக்குளம் பிரஜைகள் பொலிஸ் குழுவும் இணைந்து இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.

உயிர்கொல்லி டெங்கு நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு தங்கள் வீடுகளையும் சுற்றாடலையும் சுத்தமாக பேணுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இதில் பண்டாரிக்குளம் பிரஜைகள் பொலிஸ் குழு உறுப்பினர்கள், சுகாதாரபரிசோதகர்கள், பொலிசார் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...