வவுனியா நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டும் விடுதலை செய்யப்படாத கைதி..!!

September 15, 2018 4:58 PM

9 0

வவுனியா கனகராயன்குளம் ‘தாவுத்’ உணவு நிலைய உரிமையாளர் மற்றும் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியினால் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் கைக்கும், காலுக்கும் விலங்கிடப்பட்ட நிலையில் அனுமதிக்கப்ட்டுள்ள கெ.வசந்தகுமார் நேற்றையதினம் (14) நீதிமன்றத்தினால் மூன்று பேரின் சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்ட போதும் சிறைச்சாலை அதிகாரிகள் தனது கணவரை விடுதலை செய்யவில்லை என குறித்த நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமா எதிர்வரும் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் திங்கட்சிழமையே எனது கணவரை விடுதலை செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளியின் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற ‘தாவுத்’ என்பவருக்கு ஆதரவாக செயற்பட்ட கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கெ. வசந்தகுமாரின் குடும்பத்தினர் மீது கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...