வவுனியா நகரசபைக்கு சம்பந்தமில்லாத நபர் தலைவரின் அலுவலகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்..!!

September 15, 2018 5:00 PM

9 0

வவுனியா நகரசபைக்கு சம்பந்தமில்லாத நபர் தலைவரின் அலுவலகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்! நகரசபையின் உப நகரபிதா குற்றச்சாட்டு!

வவுனியா நகரசபைக்கு சம்பந்தமில்லாத நபரொருவர் நகரசபை தலைவரின் அலுவலகத்தில் ஆதிக்கம் செலுத்துவதாக நகரசபையின் உப நகரபிதா எஸ்.குமாரசாமி குற்றஞ்சாட்டினார்.

இதன் காரணமாக பொதுமக்கள் நகரசபை உறுப்பினர்களிடம் புகார் அளித்து வருகின்றனர், நகரசபையில் ஒரு இயக்கமோ அல்லது கட்சியோ ஆதிக்கம் செலுத்துவதை நாங்கள் விரும்பவில்லை, கட்சியை வளர்க்கவோ அல்லது ஆதிக்கம் செலுத்தவோ நாங்கள் நகரசபைக்கு வரவில்லை மக்களுக்கு சேவையாற்றவே நகரசபைக்கு வந்துள்ளோம் சபையின் பணியும் அதுவாகவே இருக்கிறது.

ஆகவே நகரசபையின் தலைவர் அனைத்து உறுப்பினர்களையும் உள்வாங்கி மக்கள் சேவையாற்ற முன்வரவேண்டும் என தெரிவித்தார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...