வழிபறி கொள்ளையில் ஈடுபட்ட இலங்கை அகதிகள்: துரத்திச் சென்று பிடித்த பொலிஸார்

May 18, 2018 12:30 AM

8 0

தமிழகம் - திருப்பரங்குன்றம் மூட்டா காலனி பகுதியில் வழிபறி கொள்ளையில் ஈடுபட்ட இலங்கை அகதிகளை பொலிஸார் துரத்திச் சென்று கைது செய்துள்ளனர்.

தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த வங்கி அதிகாரி ஒருவரை மோட்டார் சைக்களில் வந்த நால்வர் அச்சுறுத்தி, அவரிடம் இருந்த நகைகளை கொள்ளையிட்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் சந்தேகநபர்களை விரட்டிச் சென்றனர்.

இதன்போது இலங்கை அகதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனைய இருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...