வளர்ச்சிப் பாதையில் இலங்கையின் பொருளாதாரம்!

January 14, 2018 7:40 PM

14 0

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இவ்வாண்டில் 5 வீதத்தால் அதிகரிக்கும் என உலக வங்கி வெளியிட்ட பொருளாதார கணிப்பீட்டில் குறிப்பிட்டுள்ளது.

உலக வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள கணிப்பீட்டின்படி, 2018 ஆம் ஆண்டில் தெற்காசியா 6.9% வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவத்துள்ளது.

2018 - 2019 ஆம் ஆண்டுகளில் 7.3% வளர்ச்சியை இந்தியா அடையும். அவ்வளர்ச்சி 2019 - 2020 ஆம் ஆண்டுகளில் 7.5% ஆக உயர்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அது குறிப்பிட்டிருக்கிறது.

இக் காலப்பகுதியில் தனியார் துறையின் பொருட்கள் மற்றும் சேவைகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் தனியார் துறை முதலீட்டு வருமானத்தை அதிகரிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இப்பிராந்தியத்தில் இந்தியாவை தவிர்ந்த ஏனைய நாடுகள் 2018 ஆம் ஆண்டில் 5.8% ஆகவும் 2019 ஆம் ஆண்டில் 5.9% ஆகவும் வளர்ச்சியடையலாம் என்பதுடன், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் 5.8% ஆலும், பங்களாதேஷ் 6.7% ஆலும் வளர்சியடையும்.

எனவே 2018 ஆம் ஆண்டில் வலுவான தனிப்பட்ட நுகர்வு மற்றும் முதலீட்டு வளர்ச்சியை அடையும் இலங்கை, 5% வளர்ச்சி வேகத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக குறித்த கணிப்பீட்டில் குறிப்பிட்டுள்ளது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...