வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிறப்பித்துள்ள உத்தரவு

July 13, 2018 7:06 AM

21 0

தன்னிடம் கேட்காமல் வடக்கில் இராணுவத்திற்கு எந்த தகவல்களும் வழங்கப்பட கூடாது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

வடக்கில் அரச அதிகாரிகளிடம் இராணுவத்தினர் தகவல்களை கேட்டு வந்தால், தகவல்களை வழங்க வேண்டாம் என சகல அதிகாரிகளுக்கு கூற விரும்புகிறேன்.

அவர்கள் அப்படி தகவல்களை கோரினால், தன்னிடம் கேட்காமல் எந்த தகவல்களையும் வழங்க வேண்டாம் என வட மாகாண முதலமைச்சர் அறிவித்துள்ளதாக கூறுங்கள். முதலமைச்சரிடம் கேட்டு விட்டு தகவல்களை தருவதாக கூறுங்கள்.

மத்தியில் வேறு ஒரு ஆட்சி நடைபெறுகிறது. மாகாண சபையில் இன்னுமொரு ஆட்சி நடைபெறுகிறது. மூன்றாவதாக ஆளுநரின் ஆட்சி.

இந்த சகல ஆட்சிகளாலும் எமது மக்களே அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். இதன் காரணமாகவே நாங்கள் ஆரம்பத்தில் இருந்து சமஷ்டி ஆட்சியை கோருகிறோம்.

இதனை தவிர இலங்கையில் உள்ள 9 மாகாணங்களுக்கு சுயாட்சி அவசியம் என்று கோரிக்கை விடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...