வடகொரியாவுடன் நட்பு பாராட்டுவதை தவிர்த்த அமெரிக்க துணை அதிபர்..!!

February 10, 2018 10:00 AM

5 0

தென்கொரியாவில் இன்று தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க வடகொரிய பாராளுமன்ற தலைவர் கிம் யாங் நம் தலைமையில் கிம் ஜாங் உன்-னின் இளைய சகோதரி கிம் யோ ஜாங் ஆகியோர் குழுவாக நேன்று சென்றிருந்தனர்.

பியூங்சங் நகரில் இன்று நடந்த தொடக்க விழாவில் தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரும் கலந்து கொண்டனர். தொடக்க விழா மேடையில் கிம் யோ ஜாங் வந்த போது, தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் கை குலுக்கி வரவேற்றார்.

அதிகார்ப்பூர்வமாக ஒலிம்பிக் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டதும் வானவெடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. அந்த காட்சியை கிம் யோ ஜாங்-கும், மைக் பென்ஸும் அருகருகே நின்று கண்டுகளித்தனர். ஆனால், ஒருவர் முகத்தை மற்றவர் ஏறெடுத்தும் பாராமல் இறுகிய முகத்துடனும் எதற்கும் அசைந்து கொடுக்காத மனோதிடத்துடனும் இருந்தனர்.

கிம் யோ ஜாங்-உடன் வந்திருந்த வடகொரியா நாட்டு பாராளுமன்ற தலைவரும் அமெரிக்க துணை அதிபருடன் பேசவோ, கைகுலுக்கவோ முயற்சிக்கவில்லை.

கிம் ஜாங் உன்-னின் இளைய சகோதரி கிம் யோ ஜாங் அல்லது அவருடன் சென்றிருந்த கிம் யாங் நம் இருவரில் யாராவது அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் உடன் கைகுலுக்கி இருந்தால் அங்கு காட்சியே மாறி இருக்கும் என அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆசிய விவகாரங்களுக்கான ஆலோசகர் இவான் எஸ் மெடெரியோஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இதைப்போன்ற கைகுலுக்கல் நடந்திருந்தால் அது, வடகொரியாவுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டுவதாக ஒரு விளம்பர யுக்தியை வடகொரியாவுக்கு பெற்று தந்து விடலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தீர்மானித்து இருக்கலாம் என அமெரிக்க ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன..

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...