வடக்கில் அதிகமான வன்முறைச் சம்பவங்கள் பதிவு! –கஃபே…!! (வீடியோ)

February 10, 2018 3:46 PM

9 0

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை 597 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கஃபே தெரிவித்துள்ளது.

அவற்றில் 7 வன்முறைச் சம்பங்கள் பதிவாகியதாகவும் வடக்கிலிருந்தே அதிக வன்முறைச் சம்பவங்கள் பதிவானதாகவும் அவ்வமைப்பின் தேசிய அமைப்பாளரான அஹமட் மனாஸ் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தின் ஊர்காவற்றுறை பிரதேசம், முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பிரதேசம், கேகாலை மாவட்டத்தின் தெரணியகலை பிரதேசம் ஆகியவற்றிலிருந்தே அதிக வன்முறைகள் கிடைக்கப்பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேச சபை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை ஆகியவற்றிலிருந்தே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக அவர் குறிப்பிட்டார். மேலும், மட்டக்களப்பு காத்தான்குடியில் சிறு வன்முறை சம்பவங்கள் பதிவானதாக கஃபே குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 8 வேட்பாளர்கள் உள்ளிட்ட 39 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...