வடக்கு ஆளுநர் அலுவலகம் பட்டதாரிகளால் முற்றுகை..!! (வீடியோ )

November 15, 2017 11:09 AM

20 0

வடக்கு மாகாணத்தில் அரச வேலை கிடைக்காத பட்டதாரிகள் இன்று யாழ்ப்பாணத்திலுள்ள மாகாண ஆளுநரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

வேலை வாய்ப்பு வழங்கப்படும் என பலதடவைகள் வாக்குறுதி வழங்கிய அரசு, இதுவரை அதனை நிறைவேற்றவில்லை என பட்டதாரிகள் குற்றஞ்சாட்டினர்.

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாக பல மாதங்களாக தொடச்சியான போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாணம் வருகை தந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதியையடுத்து அவர் போராட்டத்தை இடைநிறுத்தினர். அவரின் வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் பட்டதாரிகள் மீளவும் இன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...