வங்கியினுள் நுழைந்து அச்சுறுத்தியதாக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு..!!

November 24, 2017 8:58 AM

4 0

அரச வங்கிக் கிளை ஒன்றின் முகாமையாளரை அச்சுறுத்தி கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை சம்பந்தமாக விசாரணை செய்யுமாறு அந்த வங்கியின் உயர் பீட முகாமை சபையினால் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவாக இருக்கலாம் என்று அறியப்பட்டுள்ள இந்தக் குழு அம்பாறை கிளையினுள் பலாத்காரமாக உள்நுழைந்து இவ்வாறு நடந்து கொண்டுள்ளதாக கிளை முகாமையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளரினால் இந்த அரச வங்கியின் உயர் பீட முகாமை சபைக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக சம்பவம் இடம்பெற்ற 20ம் திகதியன்று குறித்த கிளை முகாமையாளரினால் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...