லெபனானில் உள்ள இலங்கைப் படையினர் தொடர்பில் வெளிவந்துள்ள செய்தி

May 17, 2018 2:44 AM

11 0

லெபனானில் நிலைகொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையிலுள்ள இலங்கை படையினர் தொடர்பான தகவலொன்றை இன்னர் சிட்டி பிரஸ் வெளியிட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 49 படையினர் லெபனானில் ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

'லெபனானில் நிலைகொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையில் உரிய முறையில் தெரிவுசெய்யப்படாத இலங்கைப்படையினரும் உள்ளனர்" என்ற விடயம் ஐக்கிய நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இன்னர் சிட்டி பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

லெபனானுக்கு அனுப்பப்பட்டுள்ள 49 இலங்கைப்படையினர் ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை நியமங்களுக்கு உரிய வகையில் உள்ளீர்க்கப்படவில்லை என்று ஏற்கனவே இன்னர் சிட்டி பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பில் அந்த செய்திச் சேவை ஐக்கிய நாடுகளின் அமைதிகாப்பு படையின் அதிகாரி ஜீன் பியர் லாக்ரஸூக்கு கடிதங்களை அனுப்பியிருந்தது.

எனினும் ஒரு மாதத்துக்கு பின்னர் தற்போதே அந்த கடிதங்கள் உரிய அதிகாரிக்கு கிடைத்துள்ளமையை ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் நேற்று உறுதிப்படுத்தியதாக இன்னர் சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...