லாட்டரியில் ரூ.8 கோடி பரிசு விழுந்தும் தற்கொலை செய்த நபர்..!!

February 9, 2018 12:00 PM

4 0

தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் ஜிராவத் பாங்பான் (வயது 42). ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த இவர் அந்த நாட்டு லாட்டரி டிக்கெட் ஒன்று வாங்கி இருந்தார். அவருக்கு ஜாக்பாட் பரிசு ரூ.8 கோடியே 50 லட்சம் விழுந்தது.

இதை அறிந்த சந்தோ‌ஷத்தில் மிதந்தார். லாட்டரி சீட்டை வீட்டில் வைத்திருந்தார். அந்த லாட்டரி சீட்டை தேடிசென்றபோது அதை காணவில்லை.

பரிசு விழுந்தும் டிக்கெட் மாயமானதால் அவருக்கு பரிசு கிடைக்காத நிலை ஏற்பட்டது. இது அவருக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது.

இதனால் அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகில் கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தார். அதில் இந்த விவரங்களை எல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார்.

அவருடைய லாட்டரி சீட்டை வேறு யாராவது திருடி சென்றுவிட்டார்களா? என்று தெரியவில்லை. இதுவரை யாரும் பரிசுக்கு உரிமை கொண்டாடி வரவில்லை.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...