லலித் -அனூஷ மேன்முறையீட்டில் சலுகை கிட்டலாம்? பிரதமர் சூசகம்

September 17, 2017 1:39 PM

11 0

லலித் வீரதுங்க , அனூஷ பெல்பிட்ட ஆகியோர் தங்களுக்கு எதிரான தீர்ப்பு குறித்து மேன்முறையீடு செய்வதன் மூலம் சலுகை பெறும் வாய்ப்புள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலில் பங்கெடுத்திருந்த அமைச்சர் தயா கமகே லலித் வீரதுங்க மற்றும் அனூஷ பெல்பிட்ட விவகாரம் அரச உத்தியோகத்தர்கள் மத்தியில் தாக்கங்களை ஏற்படுத்த மாட்டாதா என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அது நீதிமன்றம் சார்ந்த விவகாரம் என்றும் லலித் மற்றும் அனூஷ மேன்முறையீடு செய்வதன் ஊடாக மட்டுமே ஏதாவது சலுகை பெறும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...