லண்டனில் பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்

February 9, 2018 8:50 PM

8 0

இலங்கை அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இலங்கையுடனான பிரித்தானிய உறவைக் கண்டித்தும் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனிலுள்ள இலங்கைத்தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ கழுத்தை அறுக்கும் சைகையை காண்பித்திருந்தார் .

பிரிகேடியர் பிரியங்கரவிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் அவரை உடனே நாடுகடத்த வேண்டும் எனக்கோரி இன்றைய தினம் உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை உட்பட பத்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கூட்டாக இணைந்து லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...