லக்னோ நகரின் முதல் பெண் மேயராக சன்யுக்தா பாட்டியா தேர்வு..!!

December 1, 2017 4:35 PM

5 0

உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ பெருநகர மாநகராட்சியின் மேயர் பதவிக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் உள்பட 19 பேர் போட்டியிட்டனர்.

அனைத்து தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட நிலையில் அயோத்தி, மதுரா-பிருந்தாவனம், மொராதாபாத், கான்பூர், பிரோஸாபாத், வாரணாசி, கோரக்பூர், லக்னோ, சஹரான்பூர், ஜான்சி, அலகாபாத், ஆக்ரா, காசியாபாத், பரேலி ஆகிய பெருநகரங்களின் மேயர் பதவிகளை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது.

லக்னோ பெருநகர மாநகராட்சியின் மேயர் பதவி இந்த முறை மகளிருக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. இங்கு போட்டியிட்ட பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சன்யுக்தா பாட்டியா மொத்தம் 3,77,166 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் மீரா வர்தன் 2,45,810 வாக்குகளை பெற்றார். இதன் அடிப்படையில் மீரா வர்தனை 1,31,356 வாக்குகள் வித்தியாசத்தில் சன்யுக்தா பாட்டியா வீழ்த்தினார்.

இந்தியாவின் முதல் பெண் கவர்னராக சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு மற்றும் முதல் இந்தியாவின் பெண் முதல் மந்திரியாக சுச்சேத்தா கிருப்ளானி ஆகியோரை பெற்றிருந்த உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் தலைநகரான லக்னோ தற்போது புதிய பெண் மேயரை முதன்முறையாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...