ரூ. 50க்கு முடிவெட்ட கூறியவருக்கு மறியல்..!!

November 15, 2017 2:07 PM

10 0

துன்னாலை – குசவப்பிட்டி பகுதியில் உள்ள சலூன் ஒன்றுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த பொருட்களை அடித்துடைத்து சேதம் விளைவித்த இளைஞனை, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு, பருத்தித்துறை நீதவான் நளினி கந்தசாமி நேற்று (14) உத்தரவிட்டார்.

குறித்த இளைஞன் சலூனுக்குச் சென்று, 50 ரூபாயைக் கொடுத்து முடிவெட்டுமாறு கூறியுள்ளார். இதற்கு கடை உரிமையாளர், தலைமுடி வெட்டுவதற்காக சங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே வெட்டமுடியும் என பதிலளித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த இளைஞன், அங்கிருந்த பொருட்களை அடித்துடைத்து சேதம் விளைவித்துள்ளார். இதையடுத்து, குறித்த இளைஞன் திங்கட்கிழமை (13) கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...