ரணில் கூட்டணியைக் காக்கும் முக்கியஸ்தர்

February 5, 2018 3:09 PM

8 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் சமரச பேச்சுகளை மேற்கொள்ளவைப்பதற்கு சபாநாயகர் முயற்சித்துவருவதாகத் தெரியவந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையே சுமார் 45 நிமிட பேச்சு நடைபெற்றுள்ளது.

இதன்போது பிணைமுறி மோசடி அறிக்கை வெளியிட்ட பின்னர் அநேகமான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் வெளியே வருவதாகவும், தேர்தலின்போது இரு பிரதான கட்சிகளின் பிரசாரம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவும் நம்பத்தகுந்த அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின்போது அரசியல் தீர்வு முயற்சிகள் பல்முனைத்தாக்குதல்களால் இல்லாமலாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேபோன்றதொரு சந்திப்பொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் நடத்திவிட்டால் தற்போது காணப்படும் விரிசல் குறைந்துவிடும் என்றும், அதற்கான தீவிர முயற்சிகளை சபாநாயகர் மேற்கொண்டு வருகின்றார் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...