ரஞ்சன் முதலில் தனது கட்சியின் ஊழல் பற்றி பேச வேண்டும்! நாமல் ராஜபக்ச

September 17, 2017 1:33 PM

19 0

ரஞ்சன் முதலில் தனது கட்சியின் ஊழல் பற்றி பேச வேண்டும்! நாமல் ராஜபக்ச

இலங்கையின் மதத் தலைவர்கள் மற்றும் நீதிபதிகளை இலக்கு வைக்கும் முன்னர் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தனது கட்சிக்குள் நடக்கும் ஊழல், மோசடிகள் குறித்து பேச வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணிகள், நீதிபதிகள் மற்றும் மதத் தலைவர்களை விமர்சித்து பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தற்போது வெளியிட்டு வரும் கருத்துக்கள் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ள குறிப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தரணிகள், நீதிபதிகள் மற்றும் பௌத்த மத தலைவர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபடும் நபர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் சிறையில் அடைக்கப்படும் ஊழலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...