யாழ் வாள் வெட்­டுச் சம்­ப­வம்; முஸ்­லிம் ஒரு­வ­ரை­யும் தேடு­கின்­றது பொலிஸ்

November 24, 2017 4:58 AM

7 0

யாழ் வாள் வெட்­டுச் சம்­ப­வம்; முஸ்­லிம் ஒரு­வ­ரை­யும் தேடு­கின்­றது பொலிஸ்

யாழ்ப்­பா­ணத்­தில் அண்­மை­யில் இடம்­பெற்ற வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்­பு­டைய குற்­றச்­சாட்­டில் முஸ்­லிம் இளை­ஞர் ஒரு­வ­ரும் தேடப்­பட்டு வரு­கி­றார் என்­கின்­ற­னர் பொலி­ஸார்.

யாழ்ப்­பா­ணத்­தில் இயங்­கும் ஆவா குழு­வில் அவ­ருக்­கும் தொடர்பு உள்­ள­தா­கக் கிடைத்த தக­வல்­களை அடுத்தே பொலி­ஸார் அவ­ரைத் தேடி வரு­கின்­ற­னர்.

“ஆவா குழு­வின் முக்­கிய சந்­தே­க­ந­பர்­கள் பலர் சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்­ள­னர். இப்­போது ஆவா குழு­வின் முக்­கிய செயற்­பாட்­டா­ள­ராக 22 வய­து­டைய இக்­ரம் என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டும் நபர் செயற்­பட்டு வரு­கி­றார் எனத் தக­வல்­கள் கிடைத்­தன. அது தொடர்­பில் மேல­திக விசா­ர­ணை­கள் இடம்­பெ­று­கின்­றன’’ என்று பெயர் குறிப்­பிட விரும்­பாக பொலிஸ் அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

ஆவா குழு­வுக்­குத் தக­வல்­களை வழங்­கும் உள­வா­ளி­யா­கச் செயற்­பட்­ட­வர் எனும் சந்­தே­கத்­தில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு இளை­ஞன் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார்.

அவ­ரி­டம் நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யில் ஆவா குழு பற்­றிய பல திடுக்­கி­டும் தக­வல்­கள் கிடைத்­துள்­ளன என்று பொலி­ஸார் முன்­னரே தெரி­வித்­தி­ருந்­த­னர்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...