யாழில் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்

February 9, 2018 5:12 AM

13 0

யாழில் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்

நாளை உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்படுகின்றன.

அந்த வகையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் இன்று காலை எடுத்துச்செல்லப்பட்டன.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள மாவட்டத்தின் தேர்தல் மத்திய நிலையத்திலிருந்து வாக்களிப்பு நிலைய மூத்த பொறுப்பதிகாரி தலைமையில் வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு மாநகரசபை, 3 நகரசபைகள் மற்றும் 13 பிரதேசசபைகள் என 17 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக யாழில் 521 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...