யாழில் மக்களை அச்சுறுத்தும் ஆளும்கட்சி வேட்பாளர்கள்! திண்டாட்டத்தில் மக்கள்

February 10, 2018 5:08 AM

4 0

அரச கட்சியின் வேட்பாளர் தமக்கு வாக்களிக்குமாறும் அவ்வாறு வாக்களிக்கத் தவறினால் சமுர்த்தி வெட்டுவோம் என அச்சுறுத்தியுள்ளதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

யாழ். ஒஸ்மானியா கல்லூரியில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்ற பொது மக்களுக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வேட்பாளர் வாக்களிப்பு நிலையத்தில் நின்று வாக்களிக்கச் சென்ற பொது மக்களிடம் தமக்கு வாக்களிக்குமாறும் அவ்வாறு வாக்களிக்கத்தவறினால் சமுர்த்தி கொடுப்பனவுகளை நீக்குவோம் என்றும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இவ்வாறான அச்சுறுத்தலினால் பொது மக்களிடையே அச்சம் நிலவி வருகின்றதுடன், வாக்களிக்காவிடின் தமது சமுர்த்தி கொடுப்பனவுகளை நீக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் தமது வாக்குகளை யாருக்கு அளிப்பதென்ற குழப்பத்தில் வாக்களித்து வருகின்றனர்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...