யாழில் புலிகளின் கீதங்கள்! விளக்கம் கூறுகின்றார் அங்கஜன்: விரைவில் நாமலுக்கு பதிலடி

January 14, 2018 12:38 PM

14 0

யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீ.சு.கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் விடுதலைப்புலிகளின் எழுச்சி கீதங்கள் ஒலிக்கவிடப்பட்டமைக்கு அங்கஜன் இராமநாதன் இன்று விளக்கமளித்துள்ளார்.

தமிழ்த் தலைமைகள் தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி வருவதனால் தான் “நித்திரையா தமிழா...” எனும் பாடலை ஒலிக்க விட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அந்த நிகழ்வில் ஒலிக்கவிடப்பட்ட பாடல் தமிழர் எழுச்சிக்கான பாடல். எந்த விதமான உள்நோக்கத்துடனும் அதை பார்க்கத் தேவையில்லை.

நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்கள். அந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தலைமைகள் எங்களை தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டு இருக்கும் போது, நாங்கள் நித்திரையாக இருக்க கூடாது.

நித்திரையில் இருந்து எழுந்து வர வேண்டும். அதனால் தான் அந்த பாட்டை ஒலிக்க விட்டோம். அத்துடன், நாமலின் கேள்விக்கு உரிய நேரத்தில் உரிய இடத்தில் உரிய பதிலை வழங்குவேன் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...